க்களால் மதிக்கப்படும் ஆன்மிகவாதியாக வேண்டுமென்றால், ஒருவரது மனம் தூய்மையாக இருக்கவேண்டும். அவருடைய சிந்தனை மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவேண்டும். அதற்கு அவருடைய ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருக்கவேண்டும். சந்திரன் நன்றாக இருந்தால் மனம் சரியாக இருக்கும். புதன் சரியாக இருந்தால் சிந்தனை சரியாக இருக்கும். குரு நன்றாக இருந்தால் பேச்சாற்றல் இருக்கும். எல்லாருக்கும் நலம்புரிய விரும்புவார்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் 6-ஆம் பாவத்தில் ராகு; 7-ல் செவ்வாய், சுக்கிரன்; 8-ல் சந்திரன், புதன்; 9-ல் சூரியன்; 10-ல் குரு; 11-ல் சனி; 12-ல் கேது இருந்தால், அதற்கு "கிரக மாலை' என்று பெயர். ஓரிடத்தில் கிரகம் ஆரம்பித்து, ஒவ்வொரு வீட்டிலும் தொடர்ந்து கிரகம் இருந்து, 7 வீடுகளிலும் கிரகம் இருக்கும் அமைப்பாகும். இதை "கிரக மாலிகா யோகம்' என்றும் கூறுவர். 8-ஆம் பாவத் திலுள்ள சந்திரன், புதன் ஆழமான சிந்தனை யைக் கொடுக்கும். 10-ல் உள்ள குரு அதை நன்கு செயல்படவைப்பார். எந்த தவறான விஷயத்திற்கும் அந்த ஜாதகர் செல்லமாட் டார். 12-ல் உள்ள கேது, மோட்சத்தைக் கொடுக்கும். அந்த ஜாதகர் சிறந்த ஆன்மிகவாதியாகத் திகழ்வார்.

gg

ஒருவரின் ஜாதகத்தில் 2-ல் உச்ச சனி, 10-ல் குரு, சந்திரன் இருந்தால், அவர் நல்ல பேச்சாளராக இருப்பார். தர்மசிந்தனை கொண்டவர்.

Advertisment

லக்னத்தில் சந்திரன், குரு, கேது; 5-ல் சனி; 7-ல் ராகு, செவ்வாய்; 11-ல் புதன், சூரியன்; 12-ல் சுக்கிரன் இருந்தால், அவர் நன்கு பேசக்கூடியவராக- புகழுடன் இருப்பார். எங்கு சென்றாலும் நல்ல மதிப்பிருக்கும். தர்மசிந்தனையுடன் பேசுவார். லக்னத் திலுள்ள சந்திரன், கேது, குரு ஆழமாக சிந்திக்கச் செய்வார்கள். அதன்மூலம் அவர் மக்களுக்குப் பயனுள்ளவராக இருப்பார். மருத்துவமனை, பள்ளிக்கூடம் ஆகியவற்றை நடத்துவார்.

ஒரு ஜாதகத்தில் 3-ல் குரு; 5-ல் கேது; 7-ல் சூரியன்; 8-ல் சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், சனி; 11-ல் ராகு இருந்தால், அவர் மக்களுக்கு உபதேசம் செய்யும் மனிதராக இருப்பார். 8-ஆம் பாவத்திலுள்ள சந்திரன், புதன், சனி ஆழமான சிந்தனையை அவரிடம் உண்டாக்கும். ஜாதகர் பலரது சிரமங்களை நீக்கக்கூடியவராக இருப்பார்.

2-ஆம் பாவத்தில் குரு; 3-ல் ராகு; 4-ல் சனி; 8-ல் செவ்வாய்; 9-ல் சுக்கிரன், கேது; 10-ல் சந்திரன், புதன்; 11-ல் சூரியன் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழக்கையை தர்மகாரியங் களுக்கு அர்ப்பணிப்பார். துறவு நிலையில் இருப்பவர் என்றும் கூறலாம். 10-ல் உள்ள சந்திரன், புதன் ஆழமான சிந்தனையைத் தரும்.

அதன்மூலம் அவர் மக்களுக்கு நல்ல விஷயங்களைக் கூறுவார்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன், புதன்; 2-ல் சூரியன்; 5-ல் குரு இருந்தால், அவர் தர்மசிந்தனை கொண்டவராக இருப்பார். பலருக்கு நன்மைகளைச் செய்வார்.

லக்னத்தில் சந்திரன்; 2-ல் சூரியன், புதன்; 10-ல் குரு; 12-ல் கேது இருந்தால், அவர் பலருக்கு நன்மைகளைச் செய்வார். மக்களுக்கு உபதேசங்கள் செய்யும் நல்ல ஆன்மிகவாதியாக இருப்பார்.

2-ல் சனி, 4-ல் சந்திரன், 10-ல் குரு இருந்தால், அவர் இல்வாழ்க்கையில் ஈடுபடாத, தர்மசிந்தனையுள்ளவராக இருப்பார்.

லக்னத்தில் சந்திரன், 2-ல் சனி, 5-ல் ராகு, 8-ல் சூரியன், 10-ல் குரு, 11-ல் கேது, 12-ல் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகர் தர்மகாரியங்களில் ஈடுபாடு கொண்டவர்.

லக்னத்தில் சூரியன், புதன்; 2-ல் செவ்வாய், சுக்கிரன்; 3-ல் ராகு; 9-ல் கேது; 10-ல் குரு இருந்தால், அவர் மிகவும் திறமைசாலிலியாக- நல்ல ஆன்மிகவாதியாக இருப்பார்.

பரிகாரங்கள்

தினமும் காலையில் தன் குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடவேண்டும்.

கருப்பு நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.

கிழக்கில் தலை வைத்துப் படுப்பது நல்லது.

உணவில் கட்டுப்பாடு வேண்டும். காரம், மாமிசம் தவிர்த்தல் நன்று.

தினமும் சூரிய வழிபாடு செய்வது அவசியம்.

லக்னாதிபதி, 9-க்குரிய கிரகத்தின் ரத்தினத்தை அணியலாம்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் பைரவர் ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி வழிபட்டால் காரியசித்தி ஏற்படும்.

செல்: 98401 11534